மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஜெயம் ரவி, சைஷா சைகல், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா உட்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வனமகன். இம்மாதம் 19 அன்று வெளியாக இருக்கும் வனமகன் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார் ஏ.எல்.விஜய். இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வனமகன் படத்தை அடுத்து உடனடியாக, மாதவன் - சாய் பல்லவி நடிப்பில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் ஏ.எல். விஜய். சார்லி மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார் ஏ.எல்.விஜய். அதுமட்டுமல்ல, சார்லி ரீமேக் தள்ளிப் போவதால் அதற்கு முன்பாக புதிய படமொன்றை இயக்கவுள்ளதாகவும், அந்தப்படம் குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் லோபட்ஜெட்டில் உருவாகவுள்ளது என்றும் சொல்லப்பட்டது.
முழுக்க கதாநாயகியை மையப்படுத்தி உருவாகவுள்ள இதில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு தற்போது கரு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பூஜை லைகா அலுவலகத்தில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். சார்லி தமிழ் ரீமேக்கிற்காக சாய்பல்லவி கொடுத்த தேதிகளையே இப்படத்துக்கு பயன் படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார் இயக்குநர் விஜய்.