ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ரோகினி தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அதுமட்டுமல்ல ஆவணப்பட இயக்குனர், குறும்பட இயக்குனர், திரைப்பட இயக்குனர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சமூக ஆர்வலர் என பல முகங்களை கொண்டவர். கங்கா என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். அதன்பிறகு கேள்விகள் ஆயிரம், அழகிய தமிழ் மகள், ரோகினியின் பாக்ஸ் ஆபீஸ், கேள்வி நேரம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறார். லைட்ஸ் கேமரா ஆக்ஷ்ன் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இது சினிமா தொடர்பான நிகழ்ச்சி. சினிமா செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேட்டி என கலவையாக ஒளிபரப்பாகிறது. நேற்று (30ந்தேதி) ஒளிபரப்பை தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வார நாட்களில் மறு ஒளிபரப்பாகும்.