பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |
சென்னை : அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அச்சமில்லை அச்சமில்லை, நினைத்தாலே இனிக்கும் உள்பட 70 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பி.எஸ்.லோகநாத் (73). இவருக்கு இன்று காலை 6 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் கே.கே.நகர் 5வது செக்டாரில் உள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு டைரக்டர் கே.பாலசந்தர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4.30 மணி அளவில் தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது. இவர் அபூர்வ ராகங்கள் படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றவர். இவருக்கு மனைவி ராதா, 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இளைய மகன் சஞ்சய் தற்போது திரைப்பட ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.