பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
விஜய் டிவியில் வெளியான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து புகழ் பெற்றவர் மனோகர். சமீபகாலமாக சினிமாவில் காமெடி வேடங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
லொள்ளுசபா தந்த நடிப்பு அனுபவம் குறித்து அவர் கூறுகையில், 1997ல் இருந்து லொள்ளுசபா நிகழ்ச்சி பண்ணி வந்தேன். அப்போது ஒரு பட பாடல் என்று விஜய் டிவியில் இருந்தது. அதன்பிறகு ஜெயா டிவியில் சினிமா சினிமா என ஒரு நிகழ்ச்சி செய்தேன். லொள்ளு சபா மாதிரியே அதுவும் போனது. ஒரு நாலு வருடம் நடித்தோம். லொள்ளுசபா நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான கதாபாத்திரங்களில் நடித்தேன். நான் பண்ணாத வேடங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவிதமான கேரக்டர்களும் பண்ணி முடித்து விட்டேன்.
லொள்ளுசபா அளவுக்கு சினிமாவில் என்னை பயன்படுத்தியிருக்கிறார்களா? என்றால் சில படங்களில் அந்தமாதிரி நல்ல வேடங்களும் கிடைத்து வருகிறது என்றுதான் சொல்வேன். மேலும், சந்தானம், லொள்ளுசபா சாமிநாதன், லொள்ளுசபா ஜீவா என லொள்ளுசபாவில் இருந்து வந்து பலரும் சினிமாவில் வளர்ந்து நிற்கிறோம். லொள்ளுசபா மூலம் எங்களது நடிப்பாற்றலை வளர்த்துக் கொண்டதுதான். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கனும் அவன்தான் நடிகன் என்பதை மனதில் கொண்டு எந்த கேரக்டரையும் ஓரங்கட்டாமல் கிடைக்கிற எல்லா வேடங்களிலும் நடிக்கிறோம்.
ஜனங்க எங்களை யாரையுமே மறக்கவில்லை. இப்போது லொள்ளுசபா நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில், எனது நடிப்புத்திறமையை வளர்த்த லொள்ளுசபாவை ஒரு முன்னோடியாக கொண்டு தான் தற்போது நான் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் லொள்ளுசபா மனோகர்.