Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

15 விவசாயிகளின் கடனை அடைக்க நிதி வழங்கிய பிரசன்னா - சினேகா தம்பதி

23 ஏப், 2017 - 15:34 IST
எழுத்தின் அளவு:
Sneha---Prasanna-donate-Rs.2-lakh-for-farmers

கடனால் பாதிக்கப்பட்ட 15 விவசாயிகளுக்கு உதவுவதற்காக நடிகர் பிரசன்னாவும், அவரது மனைவியும் நடிகையுமான சினேகாவும் ரூ.2 லட்சத்தை நிதியாக வழங்கி உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடத்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நிதியுதவியை சினேகா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசன்னா, விவசாயிகள் படும் வேதனையை டிவி.,யில் பார்த்து விட்டு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என இருவரும் முடிவு செய்தோம். என்ன செய்யலாமக என யோசித்துக் கொண்டிருந்த போது, விழாவில் ஒன்றில் கலந்து கொண்ட விஷால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தொகையை விவசாயிகளுக்கு வழங்கினார்.

எங்களின் நண்பர்கள் சிலர் விவசாய சங்கங்கள் பலவற்றுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். அவர்கள் மூலம் கடனில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சிலருக்கு எங்களால் முடிந்த நிதியை வழங்க முடிவு செய்தோம். அதற்காக தான் 15 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்தை நிதியாக வழங்கி உள்ளோம். 40 நாட்களுக்கும் மேலாக நமது விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளவோ, பேசவோ விரும்பவில்லை.

நமது கண்ணுக்கு எதிராக விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாம் சாப்பிடுவதற்கு ஏதோ ஒரு விவசாயி தான் காரணம். அதனால் கண்ணுக்கு எதிரில் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவ நினைத்தோம். பெரிய அளவில் செய்ய முடியாவிட்டாலும், நம்மால் முடிந்த அளவு சிறுசிறு உதவிகளை செய்யலாம் என்ற நோக்கத்தில் தான் இதனை செய்கிறோம். விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடிகர் சங்கம் கண்டிப்பாக இருக்கும் என்றார்.

நடிகை சினேகா பேசுகையில், இது விளம்பர நோக்கத்திற்காக செய்யப்பட்ட உதவி இல்லை. இந்த தலைமுறையில் இருக்கும் விவசாயிகள் இந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களின் சந்ததிகள் எந்த அளவிற்கு பாதிப்பை சந்திப்பார்கள். விவசாயிகளுக்கு பலரும் உதவி வருகிறார்கள். ஆனால் அவை வெளியில் தெரியாமல் உள்ளது. எங்களை பார்த்து பலரும் இது போன்று விவசாயிகளுக்கு உதவ முன்வர வேண்டும். அரசாங்கம் எப்போது முடிவு செய்யும் என தெரியாது.

உணவளிக்கும் விவசாயிகளுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு உதவி செய்யலாம். விவசாயிகளுக்கு அனைத்து தரப்பினரும் உதவ முன்வர வேண்டும். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை வேதனை அளிக்கிறது.

ஆனால் அதற்காக காத்திருக்காமல் நம்மால் முடிந்த உதவியை செய்ய பலரும் முன்வர வேண்டும். இதனால் ஒரு விவசாயி பெற்ற கடன் தீர்ந்து, அவர்கள் பலன் பெற்றால் அதுவே மிகப் பெரிய வெற்றிதான். இப்போது நாங்கள் செய்துள்ள உதவி கடலில் சர்க்கரை கலப்பது போன்றது தான். தேவைகள் அதிகம் உள்ளது. அதனால் நம்மால் முடிந்த உதவியை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
ப.பாண்டி உணர்வை தொட்ட படம் : தங்கர்பச்சான் புகழாரம்ப.பாண்டி உணர்வை தொட்ட படம் : ... முடிவுக்கு வந்தது விஸ்வரூபம் 2 பிரச்னை முடிவுக்கு வந்தது விஸ்வரூபம் 2 ...


வாசகர் கருத்து (60)

D.MANIKANDAN - pollachi,COIMBATORE.,இந்தியா
24 ஏப், 2017 - 12:56 Report Abuse
D.MANIKANDAN நமக்கு நாமே எனும் திட்டம் இந்த காவேரி பிரச்சனையில் ஏன் கைகூடாது? காவேரியை சாய ஆலைகளிடமிருந்து காப்பாற்றி, சுத்தம் செய்து, தடுப்பணைகள் கட்டி இனி வரும் நீரையாவது சேமித்தல் கூடாதா? மாவட்ட வாரியாக போராட்டம் நடத்தும் அரசியல் காட்சிகள் இந்த வெள்ளையும் சொல்லையும் போடாமல் நதிகளில் இறங்கி வேலை செய்தல் ஆகாதா? இவர்களில் விவசாயிகள் யாரும் இல்லையா? சும்மா இங்கிருந்தியிட்டே போராட்டம் அது இதுனு கத விடணுமா? ஓஒ- சாரி, ஓட்ட வாயட மணி உனக்கு.
Rate this:
Ravindiran Paramasivam P - Chennai,இந்தியா
24 ஏப், 2017 - 11:55 Report Abuse
Ravindiran Paramasivam P விவசாயம் காக்க பட வேண்டும்.
Rate this:
john - chennai,இந்தியா
24 ஏப், 2017 - 11:47 Report Abuse
john சூப்பர், blessed couples
Rate this:
Sathya Nidi - Puducherry  ( Posted via: Dinamalar Windows App )
24 ஏப், 2017 - 10:52 Report Abuse
Sathya Nidi நன்றி
Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
24 ஏப், 2017 - 10:34 Report Abuse
Stalin நன்றிகள்
Rate this:
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kodiveeran
  • கொடிவீரன்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : மகிமா ,சனுஷா
  • இயக்குனர் :முத்தையா
  Tamil New Film Pakka
  • பக்கா
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
  • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
  Tamil New Film Nimir
  • நிமிர்
  • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
  • நடிகை : பார்வதி நாயர்
  • இயக்குனர் :ப்ரியதர்ஷன்
  Tamil New Film Aval
  • அவள்
  • நடிகர் : சித்தார்த்
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :மிலிந்த்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in