ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர். அதனால் ஐபில் பாணியில் நடைபெறும் பாட்மிட்டன் போட்டியில் ஒரு அணியை விலைக்கு வாங்கியுள்ளார். பி.வி. சிந்து இவரது அணியில் விளையாடி வருகிறார்.
இளைய மகனான சண்முகபாண்டியன் சகாப்தம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொடிகட்டிப்பறந்த விஜயகாந்தின் மகன் நடித்த படம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சகாப்தம் படம் தோல்வி படமாக அமைந்தது.
தற்போது, ஒளிப்பதிவாளரும், படத் தயாரிப்பாளருமான பி.ஜி.முத்தையா இயக்கும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சண்முகபாண்டியன். இந்த படத்திற்கு மதுர வீரன் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். பி.ஜி.முத்தையா எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது. ஆனால் இதுவரை இந்த படத்தில் யார் கதாநாயகி, யார் இசை அமைப்பாளர் என்பது முடிவாகவில்லை. எல்லாவற்றையும்விட மதுர வீரன் படத்தை யார் தயாரிக்கிறார் என்ற விவரங்கள் கூட இல்லை.
இதை எல்லாம் பட பூஜையன்று வெளியிடவிருக்கிறார்கள்.