Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0' தள்ளிப் போக என்ன காரணம் ?

22 ஏப், 2017 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Why-2pointO-postponed.?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் '2.0' படத்தின் வெளியீடு அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. '3Diwali2017' என பட வெளியீட்டையும் இரு பொருள்பட குறிப்பிட்டு '2.0' படத்தின் முதல் பார்வையை மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிவித்தார்கள். ஆனால், அப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு படமே தள்ளிப் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனத்திற்கு பணம் செலவு செய்வது என்பது சாதாரண விஷயம்தான். படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை உலகத் தரத்திற்கு இணையாக உருவாக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் படம் தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்கள். ஆனால், அதுதான் உண்மையான காரணமா என்று தெரியவில்லை. 100 பேர் செய்ய வேண்டிய கிராஃபிக்ஸ் வேலையை 200 பேரை வைத்து செய்தால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்.


இருந்தாலும் ஆமீர்கான் நடித்து தீபாவளியன்று வெளிவர உள்ள 'சீக்ரெட் சூப்பர்ஸ்டார்' படத்துடன் போட்டி போட வேண்டாம் என்ற காரணத்தால்தான் '2.0' படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள் என பாலிவுட்டில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரஜினிகாந்த் என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவருடைய படங்கள் ஹிந்தியில் பெரிய வசூலைப் பெறுவதில்லை. ஹிந்தி வசூலை மனதில் வைத்துதான் அக்ஷய்குமாரை இந்தப் படத்தில் நடிக்க வைத்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் வசூல் ரீதியாக ஆமீர்கான் ஹிந்தித் திரையுலகில் உச்சத்தில் இருக்கிறார். அதுவும், அவர் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'தங்கல்' படமும் மிகப் பெரும் வசூலைப் பெற்றது. எனவே, அவருடைய அடுத்த வெளியீடான 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்' படத்துடன் போட்டி போட வேண்டாம், தனி வெளியீடாக வருவோம் என்ற காரணத்தால்தான் 2018 பொங்கலுக்குக் கூட வெளிவராமல் 25 ஜனவரி, 2018 அன்று '2.0' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in