ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரெமோ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‛வேலைக்காரன்'. மோகன்ராஜா இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், பகத்பாசில், சினேகா, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். மில் தொழிலாளி சம்பந்தப்பட்ட கதையில் இப்படம் தயாராகி வருவதால், சென்னையிலுள்ள பிரசாத் லேப் வளாகத்தில் பிரமாண்டமான மில் செட் போடப்பட்டு இரண்டு மாதங்களாக அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மேலும், சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி விட்ட நிலையில், பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்கிறார்கள். இந்நிலையில், ஜூன் மாதம் 5-ந்தேதி வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, செப்டம்பர் 29-ந்தேதி வேலைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.