Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகாபாரதம் பற்றிய கருத்து: கமல் ஆஜராக கோர்ட் உத்தரவு

21 ஏப், 2017 - 14:15 IST
எழுத்தின் அளவு:
Court-ordered-kamal-to-appear-in-Mahabaratham-case

மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியாக நடிகர் கமல் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரை நேரில் ஆஜராக சொல்லி வள்ளியூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம், தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் அரசியல், சினிமா, ஆன்மீகம், திராவிடம்... என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார். இந்துக்களின் தெய்வநூலாக போற்றி வரும் மகாபாரதம் மற்றும் இதிகாசத்தை கொச்சைப்படுத்தும் கமலை கண்டிக்கிறோம் என்று கூறி இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.


இதேகருத்தை வலியுறுத்தி, கமல் மீது நடவடிக்கை கோரி கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். அதோடு இந்த வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாத பழவுர் ஆய்வாளருக்கும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement
பாகுபலி-2-க்காக கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார் சத்யராஜ்பாகுபலி-2-க்காக கன்னட மக்களிடம் ... நடிக்க வருவதற்கு முன்பு கொத்தனார் வேலைக்கு சென்ற காளி வெங்கட் நடிக்க வருவதற்கு முன்பு கொத்தனார் ...


வாசகர் கருத்து (19)

Robins - Chennai,இந்தியா
22 ஏப், 2017 - 08:33 Report Abuse
Robins இந்த ஹிந்து மக்கள் கட்சி, அர்ஜுன் சம்பத்துக்கு நான்கு வேதங்களின் அடிப்படை விளக்கம் கூட தெரியாமல் ஒரு முறை தொலைகாட்சி நேர்கானலில் பத்திரிகையாளரின் கேள்விக்கு அசடு வழிந்தார். இதற்கு கமல் அவர்கள் எவ்வளவோ மேல். படித்து தெரிந்த பின் தான் பேசுகிறார். வேதங்களை பற்றி எந்த அறிவும் இல்லாத அர்ஜுன் சம்பத் போன்ற 'லெட்டர் பேட்' கட்சி நடத்தும் புல்லுருவிகளை உண்மையான ஹிந்துக்கள் புறம்தள்ள வேண்டும். ஹிந்துக்கள் யாரேனும் அடுத்தவர் மீது வழக்கு தொடரும் முன் வேதங்கள், ராமாயணம், பகவத்கீதை-மஹாபாரதம் ஒரு முறையாவது முழுவதுமாக படிக்கவும்.
Rate this:
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
22 ஏப், 2017 - 00:05 Report Abuse
ஏடு கொண்டலு என்னய்யா இது? அமைதி மார்க்கத்தினரிடமிருந்து நாம் வேண்டாததையெல்லாம் கற்கிறோம்.
Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
21 ஏப், 2017 - 20:22 Report Abuse
Ganapathy இருவது வருஷம் ஆகியது தினகரன் மீது ஒரு குற்ற பத்திரிகை சமர்ப்பிக்க . கமலின் கருத்துக்காக உடன் நீதிமன்றத்தில் ஆஜர் ? இம் என்ற சிறைவாசம் ஏன் என்றல் வனவாசம் என்று ஜெயலலிதா காலத்தில் துவங்கியது ,இன்னமும் தமிழகத்திற்கு அதன் போதை தெளியவில்லை . கருத்துக்களை கருத்துடன் எதிர்க்கவேண்டும் , அதை விடுத்தது கோர்ட் கேஸ் என்று போவது நல்லது அல்ல . யுகங்கள் கடந்து வாழும் நம் இதிஹாசம் யார் எந்த கருத்தை சொன்னாலும் அதற்கு தாங்கும் சக்தி உண்டு
Rate this:
Valliappan - Chennai,இந்தியா
21 ஏப், 2017 - 18:36 Report Abuse
Valliappan மஹாபாரதத்தில் எவ்வளவோ நல்ல விடயங்கள் இருக்க இவர் என் ஒரு கேட்ட விஷயத்தை மையப்படுத்துகின்றார் என்று தெரியவில்லை.. ஒவ்வொரு மனிதனும் வினையை அனுபவிப்பான், பகவத் கீதை, கர்மா வினை, பொறுமை, ஆளுமை இது போல.. ஒரு முறை கமலின் பெண்களிடம் நடத்தை பற்றி ஒரு கோவை கல்லூரியில் மாணவர்கள் கேட்ட போது ஏன் நீங்கள் கெட்டதை மட்டும் பார்க்கிண்றீர்கள் என்று ஒரு மோசமான உதாரணம் சொன்னார்..
Rate this:
S.Baliah Seer - Chennai,இந்தியா
21 ஏப், 2017 - 18:08 Report Abuse
S.Baliah Seer ஒரு முறை சூப்பர் ஸ்டார் ரஜனி தான் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் பாபாவை இமயமலைக்கு தரிசிக்க சென்றதாக சொன்னார்.150 வருடம் வாழ்ந்த மனிதனே உலகில் இல்லை.அப்படியிருக்க இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக ஒரு மனிதர் வாழ்வதாக கூறுவது விஞ்ஞானத்துக்கு விடப்பட்ட சவால் என்று யாரும் ரஜனி சாருக்கு எதிராக நீதி மன்றம் செல்லவில்லை.ஆனால் மஹா பாரதத்தில் வருவது குறித்து கருத்து சொன்ன கமல் மீது வழக்கு தொடர்ந்தது டூமச்.
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram
  Tamil New Film Bhaskar oru Rascal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in