Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜயசேதுபதி பேமிலிக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!- ஐஸ்வர்யா லட்சுமி

19 ஏப், 2017 - 09:07 IST
எழுத்தின் அளவு:
i-am-very-thank-full-to-vijaisethupathi-family-says-aishwaryalakshmi

தர்மதுரை, றெக்க, கவண் படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது திருப்பதி சாமி குடும்பம் படத்தில் ஹீரோனியான நடித்திருக்கிறார். தனது இந்த வளர்ச்சிக்குப்பின்னால் விஜயசேதுபதியும், அவரது மனைவியும் இருக்கிறார்கள் என்கிறார் அவர்.




அதுகுறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில்: திருப்பதி சாமி குடும்பம் படத்தில் குடும்பப்பாங்கான நாயகியாக நடிக்கிறேன். என்றாலும் இந்த படத்திற்கு பிறகு நடிக்கும் புதிய படத்தில் மாடர்ன் கேர்ளாக நடிக்கிறேன். முக்கியமாக நான் முகம் சுழிக்கிற கிளாமர் பண்ண மாட்டேன். சிம்ரன், ஜோதிகா மாதிரி அழகான கிளாமராக நடிப்பேன். எனது ரோல்மாடல் சமந்தா. அவரோட முதல் படத்தில் இருந்து வாட்ச் பண்ணி வருகிறேன். சேலஞ்சிங் ரோல்களாக பண்ணியிருக்கிறார். அதனால்தான் அவரை பிடிக்கும். சமந்தா மாதிரி ஒரு நடிகையாக வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை.


எனக்கு பிடித்த ஹீரோ எப்பவுமே இளையதளபதி விஜய்தான். அவரது கியூமர் பிடிக்கும், அவர் நடந்த வந்தா ஒரு மாஸாக இருக்கும். அவர் சின்ன பையனாக நான் சிகப்பு மனிதன் படத்தில் பேப்பர் தரும் ரோலில் நடித்தார். அதையடுத்து விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளை தொடங்கி பைரவா வரை விஜய் நடித்த அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். அவருடன் கண்டிப்பாக டூயட் பாட வேண்டும். அதேபோல் அஜித், சூர்யாவுடன் டூயட் பாட வேண்டும் என்பதுதான் எனது சினிமா கனவு.


மேலும் இந்த நேரத்தில், எனது நன்றியை நான் விஜயசேதுபதிக்கு தெரிவிக்கிறேன். காரணம், அவரது தர்மதுரையில் தோழியாக நடித்தேன், றெக்க படத்தில் தங்கையாக நடித்தேன். கவண் படத்தில் விஜயசேதுபதி டீமில் நானும் ஒருத்தியாக நடித்தேன். அவருடன் நடித்த போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயங்களை எனக்கு சொல்லித்தந்திருக்கிறார்.


எப்படி கேமராவை பார்க்க வேண்டும். எப்படி டயலாக் பேச வேண்டும் என கற்று கொடுத்திருக்கிறார். அவரைப்போலவே அவரது மனைவியும் என்னை உற்சாகப்படுத்துவார். அதனால் விஜயசேதுபதி பேமிலிக்கே நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.அதோடு விஜயசேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்றும் முயற்சி எடுத்து வருகிறேன். கண்டிப்பாக அதுவும் விரைவில் கைகூடும் என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in