ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சல்மான்கானின் குடும்பத்திலிருந்து அவரது சகோதரர்கள் உட்பட பலர் சினிமாவில் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது குடும்பத்திலிருந்து மற்றொரு நடிகர் உருவாக இருக்கிறார். அது வேறுயாருமல்ல அவரின் தங்கை அர்பிதா கானின் கணவர் ஆயுஷ் சர்மா தான். ஆயுஷ் சர்மாவை, தனது சொந்த பேனரில் அறிமுகம் செய்கிறார் சல்மான். இப்படம் பக்கா அதிரடி ஆக்ஷ்ன் படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இப்படத்தை யார் இயக்க போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை, இருந்தாலும் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் இப்படத்தை இயக்கலாம் என தெரிகிறது. ஏனென்றால், சுல்தான் படத்தின் படப்பிடிப்பின்போது அலி அப்பாஸிடம், ஆயுஷ் சர்மா உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.