ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுதா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை சம்பந்தமான படம் என்பதால் ஒரு நிஜ குத்துச்சண்டை வீராங்கனைதான் அந்த படத்திற்கு சரியாக இருப்பார் என்று ரித்திகா சிங்கை அப்படத்தின் நாயகியாக்கினார் டைரக்டர் சுதா. அவரும் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியதோடு, பர்பாமென்சிலும் அசத்தியதால் பின்னர் பல படங்கள் புக்காகி தற்போது தமிழ்-தெலுங்கில் பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவரைப்போலவே மச்சான் நடிகை நமீதாவும் குத்துச்சண்டை வீராங்கனைதானாம். இந்த பயிற்சியை அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக கற்றுக்கொள்ளவில்லையாம். ஒரு தற்காப்பு கலையாக பயின்று வைத்திருக்கிறாராம். மேலும், குத்துச் சண்டை சம்பந்தமான போட்டிகளில் இதுவரை கலந்து கொள்ளாத நமீதாவுக்கு இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததைத் தொடர்ந்து குத்துச்சண்டை வீராங்கனையாக சினிமாக்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்