மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்த அல்போன்ஸ் புத்ரன் மீண்டும் தமிழ்ப் படம் இயக்க வருகிறார். இப்படத்திற்காக கர்நாட சங்கீதம் தெரிந்த 16 வயது முதல் 26 வயது வரையிலான பெண் ஒருவர் தேவை எனக் கேட்டுள்ளார். 'பிரேமம்' படத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டு இடைவெளிவிட்டு அல்போன்ஸ் இயக்க உள்ள படம் இது. இந்தப் படத்திற்காக தமிழ், ஆங்கிலம் தெரிந்த உதவி இயக்குனர்கள் இருவர் வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ். அவரது இயக்கத்தில் நிவின்பாலி, சாய் பல்லவி நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த 'பிரேமம்' படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற அவரைப் பற்றிப் பேச வைத்தது. அப்படி ஒரு பெரிய வெற்றிக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் இயக்காமல் மூன்றாவது படத்தை அவர் தமிழில் இயக்க முடிவு செய்திருப்பது ஆச்சரியமான ஒன்று.
இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் யார் என்பதை பின்னர் அறிவிப்பதாக அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். 16 வயது முதல் 26 வயது வரை உள்ள கர்நாட சங்கீதம் பாடத் தெரிந்த பெண்கள் puthupadam2017@gmail.com இந்த மெயில் ஐடிக்கு அவர்களைப் பற்றிய விவரங்களை அனுப்பலாம். அடுத்த மலராக நீங்களும் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.