Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் கெட்டப்பில் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன்!

16 ஏப், 2017 - 09:34 IST
எழுத்தின் அளவு:
ganesh-venkatraman-to-act-as-ajith-in-the-movie-7-natkal

தீயா வேலை செய்யனும் குமாரு, தனி ஒருவன், நாயகி உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் கணேஷ் வெங்கட்ராமன். தற்போது இணையதளம் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அப்படம் அடுத்த வாரம் தணிக்கைக்குழுவுக்கு செல்கிறது. அதைத் தொடர்ந்து 7 நாட்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அஜித்தை போன்று சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கிறார்.


அதுபற்றி கணேஷ் வெங்கட்ராமன் கூறுகையில் : 7 நாட்கள் என்ற படத்தில் ஷக்தி வாசுவும், நானும் இணைந்து நடிக்கிறோம். எங்களுடன் பிரபு, நிகிஷா பட்டேல், அங்கனா ஆகியோரும் நடிக்கிறார்கள். கெளதம் வி.ஆர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் எனக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாசிட்டீவ் வேடம். பிரபு சாரின் மகனாக நடிக்கிறேன். மேலும், எனது கேரக்டரை வித்தியாசப்படுத்த நினைத்த இயக்குனர், அஜித் பாணியில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் என்னை நடிக்க வைத்துள்ளார். தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப் என்றாலே தல அஜித்தான்.


மேலும், தலயின் ரசிகன் என்ற முறையில் அவரைப்போன்ற கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு மனதளவில் இருந்து வந்தது. அது இந்த படத்தில் நிறைவேறியிருக்கிறது . அதனால் இந்த 7 நாட்கள் எனக்கு முக்கியமான படம். இதுதவிர வேறு சில டைரக்டர்களிடம் கதைகள் கேட்டிருக்கிறேன் என்று கூறும் கணேஷ் வெங்கட்ராமன், என்னைப் பொறுத்தவரை ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில்லை. நல்ல வில்லன் வேடம் கிடைத்தால் கூட நடிப்பேன். அதேபோல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றாலும் மறுக்க மாட்டேன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in