ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகர் சரண்ராஜ். இவரது மகன் தேஜ். தன்னைப்போலவே மகனையும் சினிமாவில் களமிறக்கினார் சரண்ராஜ். அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டானார் தேஜ், ஆனால் அந்தப்படங்கள் டிராப்பாகிவிட்டன. இதையடுத்து தற்போது லாலி லாலி ஆராரோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். தேஜ் ஜோடியாக ஷிவானி என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, லட்சுமிப்ரியா உள்பட பலர் நடிக்கிறார்கள். நாகபூஷன் ஒளிப்பதிவு செய்கிறார், ராமகோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். லிங்கன் ராஜாளி என்ற புதுமுகம் இயக்குகிறார். இது தாய் மீது பாசம் கொண்ட ஹீரோவுக்கும். தகப்பன் மீது பாசம் கொண்ட ஹீரோயினுக்கும் இடையிலான பாச போராட்டம் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. இப்படத்தின் இசையை நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் வைத்து வெளியிட்டார்.