ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சன்னி தியோல். பட வாய்ப்பு குறைந்த பின்னர் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கியிருந்தவர் கடந்தாண்டு ரீ-என்ட்ரியானார். தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது ‛பாய்யாஜி சூப்பர்ஹிட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸாக இருக்கிறது. அன்றைய தினம் தான் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள டியூப்லைட் படமும் ரிலீஸாக இருக்கிறது. இதனால் இரு படங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுப்பற்றி பாய்யாஜி சூப்பர்ஹிட் படத்தின் தயாரிப்பாளர் மகிந்திர தாரிவால் கூறியதாவது... ‛‛விநியோகஸ்தர்களிடம் பேசி வருகிறோம். அவர்கள் சல்மானின் ‛டியூப்லைட்' படம் ரிலீஸாவதாக கூறினார்கள். சல்மான் சூப்பர் ஸ்டார் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் எங்கள் படத்தின் மீது நம்பிக்கை இருப்பதால் அதுப்பற்றிய கவலையில்லை. எங்களது படத்தை சுமார் 2500 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாம் என்று எண்ணியுள்ளோம். ஆனால் இன்னும் முடிவாகவில்லை, 2000 தியேட்டர்கள் கிடைத்தால் கூட சரி, எங்களுக்கு கவலையில்லை'' என்று கூறியுள்ளார்.