ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானது. படத்தின் போஸ்டர் வெளியானதுமே, அந்த போஸ்டர்களை வைத்து 'பிளக்ஸ்' அடித்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் மகேஷ் பாபு ரசிகர்கள். ஒரு பக்கம் ரசிகர்கள் படத்தின் பெயரையும், மகேஷ்பாபுவின் தோற்றத்தையும் கொண்டாடிக் கொண்டிருக்க, மறுபக்கம் மற்ற ஹீரோக்களின் ரசிகர்கள் முதல் பார்வையைக் கிண்டலடிக்கும் வேலைகளிலும் இறங்கியுள்ளனர்.
ஒரு போஸ்டரில் கருப்பு நிற டீ ஷர்ட்டுடன் மகேஷ்பாபு நிற்பது, இதற்கு முன்பு அவர் நடித்து வெளிவந்த 'ஸ்ரீமந்துடு' படத்தில் அணிந்த டீ ஷர்ட் போல இருப்பதாகவும், அதே டீ ஷர்ட்டையே மகேஷ் பாபு பயன்படுத்தினாரா என்றும் கிண்டலடிக்கிறார்கள்.
அதையெல்லாம் தாண்டி பல யு டியுப் சேனல்களில் 'ஸ்பைடர்' படத்தின் முதல் பார்வையைப் பற்றிய செய்திகள் பல லட்சம் பார்வைகளைத் தொட்டிருக்கிறது. படத்தின் முதல் பார்வை வீடியோவும் 10 லட்சம் பார்வைகளைத் தொட உள்ளது.
தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழில் நேரடியாக முதன் முறையாக அறிமுகமாகும் மகேஷ் பாபு இங்கும் சாதனை படைப்பது நிச்சயம் என அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.