ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய்யின் நண்பர் ராஜ்குமார் ஹிரானி இயக்க சஞ்சய்யாக ரன்பீர் நடிக்கிறார். இவருடன் அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்ஷா, பரேஸ் ராவல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்திலிருந்து ஒரு ஸ்டில் லீக்காகியுள்ளது. இதில் நடிகர் ரன்பீர் கபூர், சற்று நரைத்த முடி, தாடி மற்றும் முறுக்கு மீசையுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அச்சு அசலாக சஞ்சய் தத் போன்றே இருக்கிறார். தற்போது இந்தப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.