சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
டேவிட் தவான் இயக்கத்தில் சல்மான் இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛ஜூட்வா'. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 20 வருடங்கள் கழித்து இயக்குகிறார் டேவிட் தவான். இதில் அவரது மகனும், நடிகருமான வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார். வருண் இரண்டு ரோல்களில் நடிக்க, அவருடன் ஜாக்குலின் பெர்ணான்டஸ், டாப்சி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நடிகர் டாப்ஸியும் ஜூட்வா-2 படப்பிடிப்பில் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார். படத்தில் டாப்சி, குஜராத்தை சேர்ந்த என்ஆர்ஐ., பெண்ணாக நடிக்கிறார். தொடர்ந்து படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்தாண்டு செப்., 29-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.