ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1999-ல் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் சேது. அதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தபோதும் இந்த படம் தான் விக்ரமிற்கு சூப்பர் ஹிட்டாக அமைந்து பிரபல நடிகர் பட்டியலில் அவரை சேர்த்தது. இந்த படத்தில் விக்ரமின் நண்பனாக நடித்திருந்தவர் ஸ்ரீமன். ஜாலியான நண்பனாக மட்டுமின்றி, விக்ரம் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கும் நேரத்தில் நண்பனுக்காக உருகும் உயிர் நண்பனாகவும் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருந்தார்.
ஆனபோதும், அதன்பிறகு விக்ரம் நடித்த எந்த படத்திலும் ஸ்ரீமன் இடம்பெறவில்லை. அந்த வகையில், 18 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் விக்ர முடன் ஸ்கெட்ச் படத்தில் இணைந்திருக்கிறார் ஸ்ரீமன். இந்த படத்திலும் விக்ரமின் நண்பராகத்தான் நடிக்கிறார் ஸ்ரீமன். கதைப்படி, வடசென்னை தாதாவாக நடித்து வரும் விக்ரமின் 4 நண்பர்களில் ஸ்ரீமனும் ஒருவராக நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் பழைய செண்டிமென்டான நண்பனாக இல்லாமல் அதிரடியான நண்பனாக நடித்து வருகிறார் ஸ்ரீமன்.