ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் நிதானமாக தயாரித்து வெளியிட்டால் போதும் என, அஜீத் வேண்டுமானால், பொறுமையாக இருக்கலாம்; ஆனால், அவரது ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லை. அவரது அடுத்த படமான, விவேகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள், அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகும் போதெல்லாம், கொண்டாடி தீர்க்கின்றனர். இன்டர்போல் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கிறார் அஜீத். இந்த படத்தின் போஸ்டர், சமீபத்தில், சமூக வலைதளங்களில் வெளியானது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டனர். போஸ்டர் வெளியீட்டுக்கே இந்த கொண்டாட்டம் என்றால், படம் வெளியீட்டுக்கு?