14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் துவங்கியது. பின்னி மில்லில் சுமார் 3 கோடி செலவில் சிறைச்சாலை செட் போடப்பட்டு சில வாரங்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் விசாரணை படத்தை ஆஸ்கார் விருதுப்போட்டிக்கு அனுப்பிவிட்டு அது தொடர்பான வேலைகளில் பிசியாகிவிட்டார் வெற்றிமாறன். எனவே, கௌதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்கப்போய்விட்டார் தனுஷ்.
அதன் பிறகு, தானே இயக்கி தயாரிக்கும் 'ப.பாண்டி' படத்தின் படப்பிடிப்பில் பிசியானார் தனுஷ். பின்னர் 'விஐபி-2' படத்தில் பிசியாகி விட்டதால் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இப்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ப.பாண்டி' இந்த வாரம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்து விட்டார் தனுஷ்! நேற்று சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அங்கேயே பல நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. 'வட சென்னை' இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.