ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நட்சத்திரக் குடும்பம் என்று இப்போதைக்குச் சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சூர்யாவின் குடும்பத்தைச் சொல்லலாம். அவரது குடும்பத்தில்தான் மகன்கள் சூர்யா, கார்த்தி நடிகர்களாக இருக்கிறார்கள், மருமகள் ஜோதிகா நடிகையாக இருக்கிறார். நெருங்கிய உறவினர்கள் சிலர் தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவை தற்போது சிவகுமார் குடும்பம்தான் ஆண்டு கொண்டிருக்கிறது என்று கோலிவுட்டில் கூட பேசப்படுகிறது.
சூர்யா, கார்த்தி இருவரும் இதுவரை எந்தப் படத்திலும் ஒன்றாகச் சேர்ந்து நடிக்கவில்லை. சூர்யா, விக்ரமுடன் இணைந்து 'பிதாமகன்' படத்திலும், கார்த்தி நாகார்ஜுனாவுடன் சேர்ந்து 'தோழா' படத்திலும் என மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்கள்.
கார்த்தி தற்போது விஷாலுடன் முதன் முறையாக இணைந்து நடிக்கும் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பேசிய கார்த்தி விரைவில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும், அதற்காக இருவருமே கதை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். எப்படியும் இந்த ஆண்டுக்குள் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.