ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தன்னுடைய அப்பா கஸ்தூரிராஜாவை இயக்குநராக அறிமுகப்படுத்திய ராஜ்கிரணை வைத்து தனுஷ் இயக்கும் படம் பவர் பாண்டி. ராஜ்கிரண் ஜோடியாக ரேவதி நடித்துள்ள இந்தப் படத்தில் சிறுவயது ராஜ்கிரணாக சில காட்சிகளில் தனுஷ் நடித்திருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக கௌரவ வேடத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார். சில நாட்கள் மட்டுமே நடித்த மடோன்னாவுக்கு 25 லட்சம் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். ராஜ்கிரணின் மகனாக பிரசன்னாவும், அவரது மனைவியாக சாயா சிங்கும் நடித்துள்ள இந்தப்படத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேலாக பின்னணி இசையமைத்துள்ளார் ஷான் ரோல்டன். ப.பாண்டி படத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
பவர் பாண்டி படத்துக்கு நிச்சயமாக யு சான்றிதழ் கிடைக்கும், அதன் காரணமாக வரிவிலக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படத்தின் பெயரை ப.பாண்டி என்று மாற்றி வைத்தனர். எதிர்பார்த்ததுபோலவே ப.பாண்டி படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தது. யு கிடைத்தால் வரிவிலக்கு தொகை மூலம் கூடுதல் லாபத்தை அள்ளலாம் என்பதால் 300 தியேட்டர்கள் ப.பாண்டி படத்தை திரையிட முன் வந்துள்ளன.