ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாவின் தாரைத்தப்பட்டையில் அதிரடியான வில்லனாக நடித்தவர் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். முதல் படத்திலேயே பாலாவின் மோதிரக்கையினால் குட்டுப்பட்ட அவர், அதையடுத்து மருது, தர்மதுரை என சில படங்களில் நடித்த அவர் தற்போது தனிமுகம் என்ற படத்தில் ஹீரோவாக போலீஸ் ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், ஹீரோவான பிறகு இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லாமல், வேட்டைநாய், ஸ்கெட்ச் உள்ளிட்ட சில படங்களில் நெகடீவ் ரோல்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.
இதில், விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படத்தில் வடசென்னை ரவுடியாக நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். கதைப்படி சமூக விரோதிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம், ஒவ்வொரு வில்லன்களை நெருங்கும்போதும் அவர்களது அடியாட்களுடன் அதிரடி சண்டை காட்சிகளிலும் நடிக்கிறார். ஆனால் க்ளைமாக்சில் முக்கிய ரவுடியான ஆர்.கே.சுரேஷை நெருங்கும்போது அவருடன் ஒரு அதிரடியான சண்டை காட்சியில் நடிக்கிறார். இந்த சண்டை காட்சியை பின்னி மில்லில் செட் போட்டு பிரமாண்டமாக படமாக்குகிறார்களாம்.