14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நீரஜ் பாண்டேயின் கதை மற்றும் தயாரிப்பில், ஷிவம் நாயர் இயக்கத்தில், டாப்சி, மனோஜ் பாஜ்பாய், அக்ஷ்ய் குமார் ஆகியோரது நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛நாம் ஷபானா'. டாப்சி உளவாளியாக, அதிரடி ஆக்ஷ்ன் காட்சியில் எல்லாம் நடித்திருந்தார். ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் படத்தின் வசூலும் சிறப்பாக இருக்கிறது. படம் வெளியான ஒருவாரத்தில் ரூ.27.10 கோடி வசூலித்திருக்கிறது. தொடர்ந்து வசூல் சிறப்பாக இருப்பதால் நாம் ஷபானா படம் லாபகரமான படமாக தான் இருக்கும் என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.