ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தியாகராஜனின் வாரிசு நடிகர் பிரஷாந்த். 1990-ம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்கள், நடிகைகளுடன் பணியாற்றி நம்பர்-1 நடிகராக திகழ்ந்தார். இடையில் சிலகாலம் சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்தவர், பொன்னர் சங்கர் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தற்போது சில படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
நடிகர் பிரஷாந்த்க்கு இன்று(ஏப்.,6-ம் தேதி) பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, தி.நகரில் உள்ள தனது அலுவலகத்தில் ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தார். ரசிகர்கள் சார்பில் அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. தொடர்ந்து அவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். அந்த உற்சாகத்துடன் விரைவில் தான் நடிக்க இருக்கும் புதிய படத்தினை அறிவிக்க இருப்பதாகவும் பிரஷாந்த் தெரிவித்திருக்கிறார்.