Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய், சூர்யாவுடன் நிஜத்திலும் நண்பனாகி விட்டேன் - சத்யன்

06 ஏப், 2017 - 11:03 IST
எழுத்தின் அளவு:
I-will-become-real-friends-to-Vijay-and-Suriya-says-Sathyan

விஜய் நடித்த சச்சின், அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், துப்பாக்கி, புலி, என பல படங்களில் காமெடியனாக நடித்தவர் சத்யன். தற்போது விஜய் நடித்து வரும் 61வது படத்திலும் காமெடியனாக நடிக்கிறார். அதேபோல் சூர்யாவுடன் மாயாவி, கஜினி, ஆதவன், 24 ஆகிய படங்களில் நடித்த சத்யன், தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் நடித்துள்ளார். இதில் சூர்யா படத்தில் அவரது நண்பனாக நடித்து முடித்துவிட்ட சத்யன், அடுத்தபடியாக விஜய்யுடன் அவரது 61வது படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.


இந்த படங்களில் தனது வேடங்கள் குறித்து சத்யன் கூறுகையில், இதுவரை விஜய், சூர்யா படங்களில் அவர்களது நண்பன் வேடங்களிலேயே நான் நடித்துள்ளேன். அப்படி நடித்ததின் காரணமாக நிஜத்திலும் அவர்களது உயிர் நண்பனாகி விட்டேன். அந்தவகையில், அவர்களுடன் எனக்கான காம்பினேசன் ஒர்க் அவுட்டானதால் தொடர்ந்து அவர்கள் படங்களில் எனக்கு சான்ஸ் கிடைத்து வருகிறது. அந்தவகையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவின் நண்பனாக படம் முழுக்க வரும் வேடத்தில் நடித்துள்ளேன். அந்த படத்தில் எனக்கான காட்சிகள் முடிந்து விட்டது.


இதையடுத்து விஜய்யுடன் 61வது படத்திலும் அவரது நண்பனாக படம் முழுக்க வரும் வேடத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் விஜய்யுடன் ஏப்ரல் 16-ம் தேதி முதல் நடிக்கப்போகிறேன். நாங்கள் நடிக்கும் காட்சிகள் சென்னையில் தான் படமாக்கப்படுகிறது. மேலும், இதற்கு முன்பு விஜய்யுடன் நான் நடித்த படங்களில் எனக்கு நல்ல முக்கியத்துவம் இருந்தது. குறிப்பாக துப்பாக்கியில் குணசித்ர காட்சிகளிலும் நடித்தேன். அது என்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் வேடமாக அமைந்தது. அதனால் இப்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் எனக்கு நல்ல வேடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் சத்யன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in