ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கங்காரு, வந்தாமல, கதிரவனின் கோடைமழை ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. அதையடுத்து சாரல், ரீங்காரம் படங்களில் நடித்துள்ள ஸ்ரீபிரியங்கா, மிக மிக அவசரம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆக்சன் ரோலில் நடிக்கும் ஸ்ரீபிரியங்கா, இந்த படத்தைத் தொடர்ந்து வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கெட்ச் படத்திலும் நடிக்கிறார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், சாய் பல்லவி என சில நடி கைகள் பேசப்பட்டு இறுதியாக தமன்னா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதை யடுத்து இந்த படத்திற்காக இன்னொரு நாயகி தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது ஸ்ரீபிரியங்கா கமிட்டாகியிருக்கிறார். கதைப்படி இந்த படத்தில் ஸ்ரீபிரியங்காவுக்கு இரண்டாவது நாயகி வேடமாம். விக்ரமுடன் படம் முழுக்க வரும் வேடம் என்பதோடு, பர்பாமென்ஸ் பண்ணுவதற்கான ஸ்கோப் அவரது கதாபாத்திரத்தில் உள்ளதாம். அதனால்தான், இரண்டாவது நாயகி வேடம் என்று தயங்காமல் இந்த படத்தில் கமிட்டாகியுள்ளாராம் ஸ்ரீபிரியங்கா.