ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஜ் ஜெயராஜ் இசையமைப்பில் சூர்யா, தமன்னா, பிரபு, ஜெகன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அயன்' படம் இன்று 9வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி 'அயன்' படம் வெளியானது.
சூர்யா நடித்து வெளிவந்த கமர்ஷியல் படங்களில் 'அயன்' படத்திற்கு தனி இடம் உண்டு. 'காதல் தேசம், நேருக்கு நேர்' மற்றும் சில படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.வி.ஆனந்த், 2005ம் ஆண்டில் வெளிவந்த 'கனா கண்டேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நான்கு வருடங்கள் கழித்து அவர் மீண்டும் இயக்கிய படம்தான் 'அயன்'.
முதல் முறையாக சூர்யா போன்ற ஒரு முன்னணி நடிகரை அவர் இயக்கியதால் அப்படம் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பு வீணாகாமல் ஒரு சிறந்த கமர்ஷியல் படமாக 'அயன்' படம் அமைந்தது.
புதிய களம், பரபரப்பான திரைக்கதை, பொருத்தமான ஜோடி, இனிமையான பாடல்கள் என பல விஷயங்கள் 'அயன்' படத்தின் வெற்றியை உறுதி செய்தன. சுமார் 20 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இப்படத்திற்குப் பின் சூர்யாவின் மார்க்கெட் நிலவரமும் உயர்ந்தது.
இப்படத்தின் வெற்றி கே.வி.ஆனந்தை சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனராகவும் அடையாளம் காண வைத்தது.