Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடம்பன் ஆர்யாவை அடுத்து கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்: ராகவன்

01 ஏப், 2017 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Kadamban-will-lift-arya-to-next-level-says-director-Raghav

மஞ்சப்பை வெற்றிக்கு பிறகு ராகவன் இயக்கி உள்ள படம் கடம்பன். ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்க முழுக்க முழுக்க அடர்ந்த காடுகளில் படத்தை எடுத்து முடித்திருக்கிறார் ராகவன். கடம்பனின் இறுதிகட்ட பணியில் பிசியாக இருக்கும் ராகவன், கடம்பன் பிறந்து வளர்ந்த கதை பற்றி கூறியதாவது:


மஞ்சப்பையில் அப்பாவி கிராமத்து முதியவரின் உளவியல் பற்றி சொன்னேன். அடுத்த படம் ஒரு சமூக பிரச்னையை தொடுவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது மலைவாழ் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிற செய்தியை படித்தேன். அவர்கள் பிரச்னை என்னென்ன என்பதை அறிய விரும்பினேன். இதற்காக தேனியிலிருந்து சேலம் வரை மலைகாடுகளில் நடந்தே சென்று அந்த மக்களை சந்தித்தேன். அவர்களுக்கு பல பிரச்னைகள் அவற்றில் முக்கியமானது எங்களை எங்களாகவே வாழ விடுங்கள் என்பதுதான். படத்துக்கு என்ன தேவையோ அந்த விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதை ரசிகர்கள் ஏற்கும்படியான பொழுது போக்கு அம்சங்களுடன் உருவாக்கினேன்.


இந்தப் படத்துக்கு கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஒரு இளைஞன் தேவை. ஆர்யா அப்போது அப்படி இருந்தார். அவரிடம் கதை சொன்ன உடனேயே கடம்பனாக மாறி வந்து நின்றார். சிக்ஸ் பேக் உடம்பு, எதையும் செய்ய தயார் என்கிற மனநிலையோடு வந்து நின்றார். கடம்பனாகவே வாழ்ந்தார். படப்பிடிப்பு முழுக்க காலில் செருப்பு அணியாமல் காடு மேடுகளில் நடித்தார். 500 அடி பள்ளத்தில் குதிக்க வேண்டிய காட்சியில் டூப் ஏற்பாடு செய்தும் அதை மறுத்து துணிந்து நடித்தார். 20 டேக்குள் எடுக்கப்பட்டு 21வது டேக்குதான் ஓகே ஆனது. ஒவ்வொரு முறை அவர் குதிக்கும்போது அவருக்கு எப்படி இருந்ததோ எங்களுக்கு உயிர்போய் திரும்பியது. அடர்ந்த காட்டில் அடை மழையில் படப்பிடிப்பு நடத்தினோம் 105 டிகிரி காய்ச்சலுடன் நடித்தார். இந்த உழைப்புக்காக டெடிகேசனுக்காக கடம்பன், ஆர்யாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்கிறார் ராகவன்.


Advertisement
மீண்டும் வருகிறார் மலையாள மனோரமாமீண்டும் வருகிறார் மலையாள மனோரமா நா.முத்துகுமாரின் ஒரு பாட்டு...! - ரூ.1.25 கோடி வருமானம் நா.முத்துகுமாரின் ஒரு பாட்டு...! - ரூ.1.25 ...


வாசகர் கருத்து (2)

ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
04 ஏப், 2017 - 21:54 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் மாபியாக்களுடன் கைகோர்த்துக் கொண்ட இன்றைய அரசாங்கமும், அரசமைப்பும், மண்ணின் மைந்தர்களான இவர்களை மாவோயிஸ்டுகள், நக்சல்கள் என்று முத்திரை குத்தி வேட்டையாடி வருகிறது. இவர்களின் நலனுக்கு செலவழிக்கும் பணத்தை விட இவர்களை அழிக்க பாதுகாப்பு என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை செலவழித்து இயற்கை வளங்களை - பீடிக்கு சுற்றும் டெண்டு மாற இலைகள் முதல், மழை தரும் மரங்கள் உள்பட, கருப்பு வைரம் நிலக்கரி என அனைத்தையும் கொள்ளையடிப்பவன் தான் அரசாங்கத்தை, அரசு நிர்வாகத்தை ஆட்டி படைக்கிறான்.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
01 ஏப், 2017 - 20:34 Report Abuse
Vaal Payyan படத்தின் ஆழம் ட்ரைலர் ல தெரியுது ... நான் எங்க அய்யன் தாத்தன் வாழ்ந்த காடு இது னு ஆர்யா சொல்லும் பொது தெறிக்குது .. வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in