ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் முயற்சியை நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது. சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம். எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள். மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.
இதற்கான வரைபடம் தயாரித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது அதற்கு அனுமதி கிடைத்து விட்டது. இதைத் தொடர்ந்து நேற்று நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் தலைமையில் நடந்த இந்த செயற்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 31ந் தேதி சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்துவது. விழாவுக்கு கமல், ரஜினியை அழைத்து முதல் செங்கலை எடுத்து தர வைப்பது. விழாவிற்கு அனைத்து சங்க நிர்வாகிகளை அழைப்பது, உள்ளிட்ட சங்கம் கட்டடம் தொடர்பான பல தீர்மானங்கள் தீர்மானக்கப்பட்டன.