ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? |
பொதுவாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களைத்தான் அந்தப் படத்தின் வெற்றியை காசு பண்ணுவதற்காக பார்ட்-2 ஆக படம் பண்ணுவார்கள். இந்த வழக்கத்துக்கு மாறாக, தன்னுடைய கேரியரில் தோல்விப்படமாக அமைந்த 'மனிதன்' படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஹிந்தியில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற 'ஜாலி எல்எல்பி' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'மனிதன்'. 'ஜாலி எல்எல்பி' வெற்றிகரமாக ஓடிய படம் என்பதால் மனிதன் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓடவில்லை. இந்நிலையில், 'ஜாலி எல்எல்பி' ஹிந்திப் படத்தின் 2ஆம் பாகம் சமீபத்தில் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடியது. இதனால், மனிதன்-2 ஆம் பாகம் தமிழிலும் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுகுறித்து உதயநிதியிடம் கேட்டபோது ''மனிதன் படத்தின் 2ஆம் பாகம் நிச்சயமாக உருவாகும். ஆனால், ரீமேக்காக இல்லாமல் புதிய கதையுடன் வெளிவரும்!'' என்று சொல்லி இருக்கிறார்.
தற்போது எழில் இயக்கத்தில் 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி, கௌரவ் இயக்கத்தில் 'இப்படை வெல்லும்', தளபதி பிரபு இயக்கத்தில் 'பொதுவாக என் மனசு தங்கம்' என ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படங்கள் முடிந்த பிறகு 'மனிதன்' படத்தின் 2ஆம் பாகத்தில் நடிப்பாராம்.