ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் டோரா. இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் ரிலீஸ் தேதி மார்ச்-31 என்று அறிவித்து விட்டதால், இந்த பிரச்சினையினால் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு ஏற்படும் என்பதால், அதே சான்றிதழுடன் படத்தை வெளியிட தயாராகி விட்டனர்.
மேலும், இந்த படத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக, படம் வெளியாகும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் டோரா கார் போன்று பல வடிவங்களில் கார்கள் வைக்கப்படுகிறதாம். அந்தந்த தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்லும் ரசிகர்கள், அந்த காருக்கு அருகே நின்றபடி செல்பி எடுத்து படத்தை தயாரித்துள்ள ஆரா நிறுவனத்துக்கு அனுப்பினால், அவர்கள் நயன் தாரா சந்தித்து டோரா காருக்குள் அமர்ந்தபடி போட்டோ எடுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறதாம்.
ஆனால் காருடன் நின்று செல்பி எடுத்து அனுப்பும் அத்தனை பேருக்குமே அந்த வாய்ப்பு கிடைக்காதாம். குலுக்கல் முறையில்தான் அதிர்ஷ்டசாலி நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களாம். ஆக, நீண்டகாலமாக தான் நடிக்கும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வரும் நயன்தாரா, இந்த படத்திற்காக முதன்முதலாக இறங்கி வருகிறார்.