வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
'பாகுபலி 2' படத்தின் டிரைலர் பத்து நாட்களுக்கு முன்பு யு டியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்திலேயே 5 கோடி பார்வைகள், இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர், அதிகம் லைக் செய்யப்பட்ட டிரைலர் என அடுத்தடுத்து தொடர் சாதனை இந்த டிரைலர் நிகழ்த்தியது.
தற்போது மேலும் ஒரு சாதனையாக 10 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. யு டியூப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் இந்த டிரைலர் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கு டிரைலர் யு டியூபில் இதுவரை 3 கோடியே 48 லட்சம் பார்வைகளையும், ஃபேஸ்புக்கில் 81 லட்சம் பார்வைகளையும், ஹிந்தி டிரைலர் யு டியுபில் 3 கோடியே 52 லட்சம் பார்வைகளையும், ஃபேஸ்புக்கில் 1 கோடி பார்வைகளையும், தமிழ் டிரைலர் யு டியூபில் 59 லட்சம் பார்வைகளையும், ஃபேஸ்புக்கில் 27 லட்சம் பார்வைகளையும், மலையாள டிரைலர் யு டியூபில் 11 லட்சம் பார்வைகளையும், ஃபேஸ்புக்கில் 13 ஆயிரம் பார்வைகளையும் பெற்றுள்ளது.
தெலுங்கில் நேரடியாகத் தயாரிக்கப்பட்டுள்ள 'பாகுபலி 2' படத்தின் தெலுங்கு டிரைலரை விட ஹிந்தி டிரைலருக்கு அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் 28ம் தேதி படம் வெளியாக உள்ளது.