ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் புதிய படம் விவேகம். முந்தைய படத்தை இயக்கிய சிவா இதனையும் இயக்குகிறார். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் விவேக் ஓபுராய் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
இது ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் பட பாணியிலான துப்பறியும் படம். அஜித் இன்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பெரும்பகுதி கதை வெளிநாட்டில் நடக்கிறது. வில்லனை தேடி அஜித் நாடு நாடாக செல்வது மாதிரியான கதை. இதனால் படப்பிடிப்புகளும் ஐரோப்பாவின் பல நாடுகளில் நடந்து வருகிறது. படத்தரப்பிலிருந்து இதுவரை ஒரே ஒரு பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதில் அஜித் சிக்ஸ் உடற்கட்டுடன் போஸ் தருகிறார்.
ஆனால் அடிக்கடி படப்பிடிப்பு தளத்தில் அஜித் இருக்கும் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அஜித் பைக் ஓட்டுவது, ஸ்டைலாக நிற்பது போன்ற படங்கள் வெளியான நிலையில், சமீபத்தில் அவர் உடல் முழுவதும் காயங்களுடன் வருவது மாதிரியான படங்கள் வெளிவந்தது. தற்போது அஜித் பனிமலையில் பனிகளுக்கிடையில் மறைந்திருந்து எதிரிகளை துப்பாக்கி கொண்டு குறிபார்ப்பது போன்ற படம் வெளிவந்திருக்கிறது. இந்த படங்கள் தானாக வெளிவருகிறதா? இல்லை படத்தை பற்றிய செய்திகள் லைம் லைட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக படக் குழுவினராலேயே திட்டமிட்டே லீக் செய்யப்படுகிறதா.? என்று தெரியவில்லை.