ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரைப்பட பின்னணி பாடகர், டி.எம்.சவுந்தரராஜன், 1923, மார்ச், 24ல் மதுரையில் பிறந்தார். காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம், முறையாக இசைப் பயிற்சி பெற்றார். பல ஆண்டுகளாக கச்சேரி நடத்தி வந்த இவர், 1950ல் வெளியான, கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில், ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி என்ற பாடல் மூலம் அறிமுகமானார். எம்.ஜி.ஆர்., - சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு, பின்னணி பாடியுள்ளார். இவர், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், 2,500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடி உள்ளார். பட்டினத்தார், அருணகிரி நாதர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.கோவையில், 2010ல் நடந்த உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான, செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலே, இவர் இறுதியாக பாடிய பாடல். இவர், 2013, மே, 25ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.