ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அப்பா படத்திற்கு பிறகு சமுத்திரகனி இயக்கி நடித்து வரும் படம் தொண்டன். இந்த படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்துள்ள அவர், அதன்மூலம் இலவச சேவை செய்பவராக நடித்திருக்கிறார். முக்கியமாக, அரசு ஆம்புலன்ஸ் வந்து சேருவதற்கு முன்பே, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவர்களை காப்பாற்றுகிறாராம் சமுத்திரகனி. அதனால் இந்த படம் அப்பாவிற்கு பிறகு தன்னை இன்னும் அதிகப்படியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் என்று எதிர்பார்க்கிறார் அவர்.
மேலும், இந்த படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையை வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்று அப்படத்துக்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரிடம் சொன்னாராம் சமுத்திரகனி. அதையடுத்து, பின்னணி இசையில், மேற்கத்திய இசைக்கருவிகள், நாட்டுப்புற இசைக்கருவிகள் என இரண்டையும் கலந்து புதுமையான முறையில் பின்னணி இசை கோர்க்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, சினிமாக்களில் அதிகமாக பயன்படுத்தப்படாத இசைக்கருவிகளை இந்த படத்திற்கு பயன்படுத்தி வருகிறார் ஜஸ்டின் பிரபாகரன். இதனால் படத்திற்கு ஒரு புதிய டோன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம் சமுத்திரகனி.