அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

லைகா நிறுவனத்தின் சார்பில் இலங்கையில் தமிழர்களுக்கு வழங்கப்பட இருக்கும் இலவச வீடு வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கபாலி படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், தற்போது எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை பெயரில் ஞானம் என்ற அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது ஞானம் அறக்கட்டளை.
இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவேண்டும் என்று ரஜினியிடம் கேட்டபோது, ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தினால் உடனே மகிழ்ச்சியுடன் வர சம்மதம் சொல்லிவிட்டார். இதுபோன்ற நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி மற்றும் ஜஸ்டிஸ் கமிட்டி மெம்பர் கீத் வாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.