Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்று ஜிவி... இன்று அசோக்...! - கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்தின் பிடியில் தமிழ் சினிமா...! | ஆர்யாவின் அறிவிப்பு, உண்மையா...பொய்யா.. ? | ராகவேந்திரர் வழிபாடு, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரா...? | தமிழுக்கு வருகிறார் ரெபே மோனிகா | தீபிகா, பன்சாலி மீது நடவடிக்கை : உ.பி.முதல்வர் வலியுறுத்தல் | பத்மாவதி எதிர்ப்பு : வீட்டுக்குள் முடங்கிய தீபிகா | தயாரிப்பாளர் தற்கொலை : அறிக்கையோடு இல்லாமல் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா ? | அன்புச்செழியன் தலைமறைவு : தனிப்படை அமைப்பு | பாரதியாரின் தோற்றத்தில் முதல் ஊழல் ஆதாரம் வெளியிட்ட கமல் | சினிமாவை விட்டு ஓடி விடுங்கள் : கந்துவட்டி கும்பலுக்கு விஷால் எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, விஜய் ரசிகர்கள் எமோசனலாக பார்க்கிறார்கள்! -நெருப்புடா அருண்ராஜா காமராஜ் பேட்டி

22 மார், 2017 - 11:37 IST
எழுத்தின் அளவு:
all-rajinikanth-and-vijai-fans-are-emotional-says-arunraja-kamaraj

பாடலாசிரியர், பாடகர், நடிகர் என மூன்று முகம் காட்டி வருபவர் நெருப்புடா அருண்ராஜா காமராஜ். விரைவில், இயக்குனர் என்ற இன்னொரு முகத்தை காண்பிக்க தயாராகிக்கொண்டி ருக்கிறேன் என்கிறார் அவர்.தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

இப்போது என்னென்ன படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளீர்கள்?


அடங்காதே, செம, 4 ஜி, பலூன், மரகதநாணயம் என பல படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறேன். ஜி.வி.பிரகாஷின் எல்லா படங்களிலும் எனது பாடல் இருக்கும். பலூன் படத்தில் முழுப்பாடல்களையும் எழுதுகிறேன். மரகதநாண யம் படத்தில் பாடல் எழுதியிருப்பதோடு நடித்தும் இருக்கிறேன். ஹீரோ, முனீஷ்காந்த், நிக்கி கல்ராணி என அனைவரும் படம் முழுவதும் டிராவல் ஆகிற மாதிரி ரோல். 80, 90-களில் உள்ள ஓல்டு கெட்டப்பில் நடிக்கிறேன். ஒரு பெரியவர் மாதிரியான வேடம். அதற்காக குரலிலும் சேஞ்ச் பண்ணியிருக்கிறேன்.மேலும், நான் இயக்குனராகத்தான் சினிமாவுக்கு வந்தேன். நாளைய இயக்கு னரில் குறும் படங்கள் பண்ணினேன்.


சிம்பு-ஹன்சிகா-ஜெய் நடித்த வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக ஒர்க் பண்ணினேன். அதன்பிறகு சர்வேகளுக்காகத்தான் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் எழுதத் தொடங்கினேன். ராஜாராணியில் நடித்தேன். வர்ற வாய்ப்புகளை சரியான பயன் படுத்திக்கொண்டு வருகிறேன். வாய்ப்புகளை உதாசீனப்படுத்தக்கூடாது. இல்லையேல் நம்மை உதாசீனப்படுத்தி விடும். பாடல் எழுதுவதில், பாடுவதில் நல்ல பெயரைவாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்


பாடல் எழுதிக்கொண்டே பின்னணி பாடுவது பற்றி?


நான் முறையாக இசை பயிற்சி எடுத்ததில்லை. ஆனால் இசை ரொம்ப பிடிக்கும். பிடித்த விசயம் என்பதால் தவறு குறைவாக இருக்கும். தவறு செய்தாலும் இசையமைப்பாளர்கள் சரிபண்ணி விடுகிறார்கள். அந்த அளவுக்கு சாப்ட் வேர்கள் உள்ளன. மேலும், கபாலியில் இடம்பெற்ற நெருப்புடா பாடலுக்கு முன்பே ஜிகர்தண்டாவில் எழுதி பாடினேன். அதற்கு முன்பே இரண்டு பாடல் கள் ஹிட்டாகியிருந்தது. அதனால் நெருப்புடா பாடலை என்மீது நம்பிக்கை வைத்துதான் கொடுத்தார் சந்தோஷ் நாராயணன். நெருப்புடா பாடலுக்கு பிறகு பைரவாவில் வர்லாம் வர்லாம் பைரவா, கொடியில் கொடி பறக்குது என நான் பாடிய பல பாடகள் சூப்பர் ஹிட்டானதால் இப்போது பாடுவது மெயினாகி விட்டது. எழுதுறதைவிட பின்னணி பாடத்தான் அதிகமாக கூப்பிடுகிறார்கள்.


எப்போது டைரக்சன் பண்ணுவீர்கள்?


அதற்கான முயற்சி நடக்கிறது. 3 கதைகள் ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். பட்ஜெட்ல பண்ணத்தான் நிறையபேரு கேட்கிறாங்க. சரியான தயாரிப்பு நிறுவனம், நடிகருக்காக வெயிட் பண்ணுகிறேன். ஒரு சரியான ஹீரோகிட்ட கதை சொல்லி நல்ல படமாக பண்ண வேண்டும் என்பதுதான் ஐடியா. இப்போது என்னிடம் உள்ள கதைகளில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பது மாதிரிதான் உள்ளது. நான் ஹீரோவை மனசில் வைத்து கதை பண்ண மாட்டேன். கதைக்கு தேவையான நடிகர்களைத்தான் தேர்ந்தெடுப்பேன்.மேலும், எனக்கு எந்த படம் ஓடுகிறதோ அதுதான் கமர்சியல். ஓடவில்லை என்றால் அது கமர்சியல் படமில்லை. காக்கா முட்டை என்னைப்பொறுத்த வரைக்கும் கமர்சியல்தான். அதை ஆர்ட் பிலிம் என்கிறார்கள்.


வியாபாரரீதியாக வெற்றி பெறும் படம் எல்லாமே கமர்சியல் படம்தான். பிதாமகன், சேது, ஓகே கண்மணி எல்லாமே கமர்சியல் படங்கள்தான். நான் இயக்கும் படமும் கமர்சியலாக இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் படம் இயக்குவேன். மேலும், நான் டைரக்சன் பண்ணினாலும், பாடல் எழுதுவது, பாடுவதை நிறுத்தமாட்டேன். எனக்கு அதுதான் சோறு போட்டது. நான் கஷ்டப்படும்போது சோறு போட் டதை மறக்க முடியாது. எப்போதும் தொடருவேன்.


ரஜினி படத்துக்கு பாடிய பிறகு ரீச் எப்படி?


ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி விஜய் ரசிகர்களும் நன்றி சொல்கிறார்கள். பாடல் எழுதுவது, பாடுவது எனது தொழில். ஆனால் ரசிகர்கள் எமோசனலாக பார்க்கிறார்கள். எனக்கு நன்றியெல்லாம் சொல்கிறார்கள். அவர்களுக்குள்ளே நான் பாடிய பாடல்கள் நல்லதொரு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதே இதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.


ரஜினி, விஜய்யை வைத்து டைரக்ட் பண்ணுவீர்களா?


கண்டிப்பாக அவர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் பாட்டு எழுதுவது, பாடுவதை தகுதியாக வைத்துக்கொண்டு அவர்களிடம் கதை சொல்ல முடியாதில்லையா. குறும் படம் பண்ணியது மட்டும்தான் நம்மளோட தகுதி. ஒரு படமாவது எடுத்திட்டு அவர்களிடம் போக வேண்டும் என்பது எனது எண்ணம். இப்போதைக்கு அவர்களுக்கான கதையும் என்னிடம் இல்லை. மேலும், ரஜினி சாரை வைத்து என்னால படம் பண்ண முடியுமா என்பது தெரியல. அதற்கு ஒரு ரெண்டு படமாவது ஹிட் கொடுத்திருக்கனும். ஆனால் தயார் பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.


அப்படியென்றால், உங்கள் வாழ்க்கையில் நினைக்காததெல்லாம் நடக்கிறது அப்படிதானே?


நினைக்காதது எல்லாம் நடந்திருக்கு என்று சொல்ல முடியாது. திருச்சியில் கல்லூரியில் படித்தபோதே நான் பாட்டெல்லாம் எழுதியிருக்கிறேன். நண்பர் வாயிலேயே இசை பண்ணுவார். அதற்கு நான் பாடல் எழுதுவேன். பாட்டு எழுது வது பாடுவது எனக்கு அப்பவே ஆர்வம். அப்படி நான் செய்து வந்த சின்னச்சின்ன விசயங்கள்தான் எழுத முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. இந்த மாதிரி வாய்ப்பு அமையும் என நான் எதிர்பார்க்கல. அமைந்ததை சரியாக பண்ண ணும் என பொறுப்போடு மக்களுக்கு பிடித்த மாதிரி பண்ணிட்டு வர்றோம் என்ற சின்ன சந்தோசம் உள்ளது.


இல்லாத ஒன்றை நாம எடுத்துட்டு வர முடியாது. எனக்குள் இருந்த விசயம்தான் வெளிப்பட்டிருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தவர்களைத்தான் நான் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். பீட்சாவுல ரெண்டு பாட்டு கொடுத்தாரு சந்தோஷ் நாராயணன். டார்லிங்குல ஆரம்பிச்சு ஜி.வி.பிரகாஷ் எல்லா படத்திலேயும் பாட்டு கொடுக்கிறார். இப்போது யுவன், இமான் எல்லோரும் சான்ஸ் தர்றாங்க. அவங்க நம்புற அளவுக்கு என்னை வளர்த்துக்கிட்டேன் என்பதுதான் ஒரு சந்தோசம். இன்சியலா என்னை யாருக்குமே தெரியாதப்ப சந்தோஷ் நாராயணனும், ஜி.வி.பிரகாசும்தான் வாய்ப்பு தந்தார்கள். அந்த நம்பிக்கைதான் என்னை இவ்ளோ பெரிதாக வளர்த்துள்ளது என நினைக்கிறேன் என்கிறார் நெருப்புடா அருண்ராஜா காமராஜ்.


Advertisement
அரசியல்வாதிகள் வாக்கு தவறலாம், நான் தவறமாட்டேன்! கஞ்சா கருப்புஅரசியல்வாதிகள் வாக்கு தவறலாம், நான் ... பத்திரிக்கையாளர்களை தாக்கிய 2.O படக்குழுவினர் ! பத்திரிக்கையாளர்களை தாக்கிய 2.O ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in