ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் ஆகிய படங்களில் நடித்தவர் விஜய் ஆண்டனி. தற்போது அண்ணாத்துரை என்ற படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தையும் எமன் படத்தைப்போலவே முதல்காப்பி அடிப்படையில் அவர் தயாரித்து நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதற்கு முன்பு அவர் நடித்த படங்கள் தமிழில் தயாராகி தெலுங்கிற்கு டப்பிங்காகி வந்தநிலையில், இந்த அண்ணாத்துரை படம் தமிழ், தெலுங்கில் நேரடியாகவே தயாராகிறது.
இந்தநிலையில், சைத்தான், எமன் படங்களில் நடித்து வந்தபோது அடுத்தடுத்து தான் நடிப்பதற்காக நான்கு கதைகள் கேட்டு ஓகே பண்ணி வைத்திருந்தார் விஜய் ஆண்டனி. ஆனால், இப்போது அந்த கதைகளில் மாற்றம் செய்ய வேண் டும் என்று அந்தந்த டைரக்டர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளார். அதனால் அந்த கதைகளில் திருத்தம் செய்யும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. குறிப்பாக, பிச்சைக்காரனுக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான், எமன் படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை என்பதும் இந்த கதை திருத்தத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.