ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிறிய வயதில் இருந்தே இசை மீது ஆர்வம் கொண்டவர் நடிகை மடோனா செபஸ்டியன். அதன்காரணமாக பல ஆல்பங்களில் அவர் பாடியிருக்கிறார். அவர் பாடிய சில மியூக் ஆல்பங்களை யு -டியுப்பில் பார்த்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, கவண் படத்தில் மடோனாவை ஹேப்பி நியூ இயர் என்ற பாடல் பாட வைத்துள்ளார்.
இதுபற்றி ஹிப்ஹாப் தமிழா ஆதி கூறுகையில், நான் இசையமைக்கும் படங்களில் இண்டர்நெட்டில் இருந்து புதுப்புது ஆட்டிஸ்டுகளை எடுத்து அறிமுகம் செய்கிறோம். அப்படி பார்க்கும்போது, யு-டியூப்பில் மடோனாவோட இண்டிபெண்டன் சாங்க்ஸ் பார்த்திருக்கிறேன். அதன்பிறகுதான் கவண் படத்தில் அவரை பாட வைக்க முடிவு செய்தேன். ஹேப்பி நியூ இயர் என்று தொடங்கும் பாடலில், நான், டி.ஆர்., மடோனா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறோம்.
இந்த படத்தில் இடம்பெற்ற ஆக்சிஜன் பாடல் ஹிட்டடித்துள்ள நிலையில்,
அடுத்து பாரதியாரோட பாடல் வரிகளை பயன்படுத்தியிருக்கிறோம். இந்த ஜெனரேசன் பசங்க தூக்கிப்போட்டுட்டு ஈசியாக போயிடுவாங்க. அவங்க ளுக்கும் பாரதியார் பாடல்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றுதான் ஹிப்ஹாப் தமிழாவை பண்ண ஆரம்பித்தேன். அந்த பாரதியார் பாடல் இப்போது கவண் படத்திலும் இடம்பெற்றுள்ளது.
தீராத விளையாட்டுப்பிள்ளை என்று தொடங்கும் அந்த பாடல் திணிச்ச பாடல் அல்ல, கதைக்குள்ளேயே வர்ற பாடல். என்னால் முடிந்தவரைக்கும் நன்றாக பண்ணியிருக்கிறேன். கண்டிப்பாக இது இளவட்ட ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக இருக்கும் என்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.