மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் பாரதிராஜா, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிழல்கள், முதல் மரியாதை, சிவப்பு ரோஜாக்கள், மண் வாசனை, அலைகள் ஓய்வதில்லை என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளை தந்தவர். பாக்யராஜ், ராதிகா, கார்த்திக், ராதா, ரேவதி, ரதி, காஜல் அகர்வால், பிரியாமணி, ரஞ்சிதா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். இப்போதும் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார், நடித்துக் கொண்டிருக்கிறார்.
அனுபவம் நிறைந்த பாரதிராஜா தன் அனுபவத்தையும் தான் கற்றதையும் வருங்கால சந்ததிக்கு தரும் வகையில் பாரதிராஜா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சினிமா என்ற பெயரில் திரைப்பட பயிற்சி கல்லூரி ஒன்றை தொடங்கி உள்ளார். இதில் நடிப்பு, ஒளிப்பதிவு இ யக்கம், எடிட்டிங், சவுண்ட் டிசைனிங், சண்டை இயக்கம், நடன இயக்கம், தயாரிப்பு நிர்வாகம் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பாரதிராஜாவின் தலைமையில் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் இந்த பயிற்சியை அளிக்க இருக்கிறார்கள்.
இந்த நிறுவனத்தின் ஆலோசகர்களாக பாரதிதாசன் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன், இயக்குனர்கள் மணிரத்னம், மகேந்திரன், பிரியதர்ஷன், ராஜீவ் மேனன், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் கங்கை அமரன் நடிகை ராதிகா, சுஹாசினி ஆகியோர் நியமிக்கப்பப்பட்டுள்ளனர். விரைவில் பிரமாண்டமான முறையில் திறப்பு விழா நடக்கிறது.