Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷ்ணு விஷாலின் கதாநாயகன் ஜுன் 23-ல் ரிலீஸ்

21 மார்,2017 - 09:55 IST
எழுத்தின் அளவு:

மாவீரன் கிட்டு படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடியாக கத்ரீன் தெரசா நடிக்கிறார். சூரி காமெடியனாக நடித்துள்ள இந்தப்படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு கதாநாயகன் என பெயரிடப்பட்டுள்ளனர்.


பல வருடங்களுக்கு முன் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த படத்தின் பெயர் இது. எனவே அப்படத்தின் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசனிடம் அனுமதி பெற்று இந்த தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவு பெற்றுள்ளது. கதாநாயகன் படத்தை விஷ்ணு விஷால் தயாரித்தே வருகிறார். அவரது முந்தைய படமான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை வாங்கி வெளியிட்ட ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


ஜுன் 23 ஆம் தேதி கதாநாயகன் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து முண்டாசுப்பட்டி ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.


Advertisement
இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தி விட்டார் கங்கைஅமரன்! -இசையமைப்பாளர் செளந்தர்யன்இளையராஜா ரசிகர்களை ஆழ்ந்த ... விவேகம் படத்தின் உரிமையை வாங்கியதா ஜாஸ் சினிமாஸ்? விவேகம் படத்தின் உரிமையை வாங்கியதா ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film thappu thanda
    • தப்புதண்டா
    • நடிகர் : சத்யா (புதுமுகம்)
    • நடிகை : சுவேதா கய்
    • இயக்குனர் :ஸ்ரீகண்டன்
    Tamil New Film thiri
    • திரி
    • நடிகர் : அஸ்வின் காக்மானு
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
    Tamil New Film Yeidhavan
    • ஏய்தவன்
    • நடிகர் : கலையரசன்
    • நடிகை : சாட்னா டைட்டஸ்
    • இயக்குனர் :சக்தி ராஜசேகரன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in