மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் கொடிவீரன். இந்தபடத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை தான் கேட்டனர். ஆனால் அவர் இரண்டு புதிய தெலுங்கு படங்களில் கமிட்டாகியிருப்பதால் கால்சீட் இல்லையாம். அதனால் தான் ஹன்சிகாவை சசிகுமாருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் அவர் கிராமத்து பெண்ணாக நடித்திருந்ததும் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்க முக்கிய காரணமாகியிருக்கிறது.
மேலும், இதே படத்தில் இரண்டாவது நாயகியாக பூர்ணா நடிக்கிறார். இவர் சசிகுமாரின் முறைப்பெண்ணாக ஒன்சைடாக அவரை காதலிக்கிறாராம். அடுத்து, சசிகுமாரின் தங்கையாக இன்னொரு முக்கியமான வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். தர்மதுரை படத்தில் கிராமத்து வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நல்ல பர்பாமென்ஸ் கொடுத்திருந்ததால் அவருக்கு இந்த படத்தில் தங்கை வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனாலும் முக்கியமான கதாபாத்திரமாம். அந்தவகையில், இந்த கொடிவீரன் படத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் செண்டிமென்ட் காட்சிகள் மற்றும் பாடலும் இடம் பெறுகிறதாம்.