Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தடை போட்ட இளையராஜா - இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு

19 மார்,2017 - 11:19 IST
எழுத்தின் அளவு:

இளையராஜா இசையில் உருவான பாடல்களை, இனி பாடப் போவதில்லை என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இளையராஜா -எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூட்டணியில் உருவான, சினிமா பாடல்களுக்கு, இன்றும் வரவேற்பு உள்ளது.


மகன் ஏற்பாடு


திரையுலகிற்கு வந்து, 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளை, எஸ்.பி.பி., நடத்தி வருகிறார். அவரது மகன் சரண் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.


நோட்டீஸ்


இந்நிலையில், என் இசையில் உருவான பாடலை, என் அனுமதியின்றி எப்படி பாடலாம் என, இளையராஜா தரப்பிலிருந்து, எஸ்.பி.பி.,க்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இதுகுறித்து, எஸ்.பி.பி., தன், பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இரண்டு நாட்களுக்கு முன், இளையராஜாவின் வழக்கறிஞர், எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகி களுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


காப்புரிமை மீறல்


அதில், இளையராஜாவிடம் முன் அனுமதி பெறா மல், அவரது இசைஅமைப்பில் உருவான பாடல் களை மேடைகளில்பாடினால், அது காப்புரிமை மீறல். உரிமை மீறலுக்கு பெருந் தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. எஸ்.பி.பி., - 50 என்ற நிகழ்ச்சி, என் மகன் சரணால் தயாரிக்கப்பட்டது. 2016 ஆகஸ்டில், கனடாவில், டொராண்டா நகரில், இந்நிகழ்ச்சியை துவக்கினோம். தொடர்ந்து ரஷ்யா, மலேஷியா என, பல நாடு களுக்கு சென்றோம்.


இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன்


இந்தியாவின்,பல நகரங்களி லும், இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது, எந்த எதிர்ப்பும், இளையராஜா தரப்பில் இருந்து வரவில்லை. அமெரிக்காவில் நடத்திய போது, எதிர்ப்பு வந்துள்ளது ஏன் என, புரிய வில்லை. இதுபோன்ற சட்டம் குறித்து, எனக்கு விபரம் தெரியாது. இருந்தாலும், சட்டத்தைமதிப்பது என் கடமை. இனி, மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடப் போவதில்லை. அதே வேளையில், ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.


பெரிதுப்படுத்த வேண்டாம்


இறைவன் அருளால், மற்ற இசையமைப்பாளர் களின் பாடல்களையும், அதிகம் பாடியுள்ளேன்; அவர்கள் ஆதரவு தருவர் என, நம்புகிறேன். இப்பிரச்னை தொடர்பாக, எந்த ஒரு கடுமையான வாதங்களையும், கருத்துக்களையும் கூற வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். இது, கடவுளின் கட்டளை என்றால், அதை நான் பணிவுடன் கடைபிடிப்பேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.இளையராஜா - எஸ்.பி.பி., இடையே உருவாகி யுள்ள இந்தப் பிரச்னை, இசையுலக ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தவறாக புரிந்து விட்டனர்


இளையராஜாவின் ஆலோசகர் பிரதீப்குமார் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பியதை, மக்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டனர். வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை என, தெரிவித்துள்ளார்.


Advertisement
ஏப்ரல் 14ல் ரஜினியின் புதிய படம் ஆரம்பம் ?ஏப்ரல் 14ல் ரஜினியின் புதிய படம் ... மக்களை சிரிக்க வைத்தவரை சினிமா சிரிக்க வைக்கவில்லை மக்களை சிரிக்க வைத்தவரை சினிமா ...


வாசகர் கருத்து (11)

Robin - Chennai,இந்தியா
20 மார்,2017 - 07:56 Report Abuse
Robin ஒரு பாடலுக்கு இசை எவ்வளவு முக்கியமோ அதே போல் பாடகரின் குரல், கவிஞரின் கற்பனை முக்கியம். மேலும் பல பாடல்கள் நாம் விரும்புவத்திற்கு காரணம் நாம் அந்த பாடல்களை கேட்ட அல்லது பார்த்த தருணங்களின் நினைவுகளை திரும்ப கொணர்வதே...
Rate this:
மீனா தேவராஜன் - singapore,சிங்கப்பூர்
20 மார்,2017 - 04:48 Report Abuse
மீனா தேவராஜன் இவர் பாட அவருடைய பாடல்கள் எங்கும் பரவும். இளையராஜா இசை ஞானியாக இருக்கலாம், அவரின் பாடல்களை, பாலசுப்பிரமணியத்தின் குரலில் கேட்டால் இனிமை இருவரின் புகழும் வளரும். ஏன் வயதான காலத்தில் விதண்டாவாதம் இளைய ராஜாவுக்கு
Rate this:
Arun - Chennai,இந்தியா
20 மார்,2017 - 01:36 Report Abuse
Arun ராஜாவின் பாடல்களை மேடையில் பாடி இவர்கள் பல லட்சங்கள் சம்பாரித்து வரும் போது.. அந்த பாடல்களை உருவாக்கியவர் என்ற அடிப்படையில் அவருக்கு சேர வேண்டிய காப்புரிமையை குடுத்துவிட்டு பாடலாம்... இதெற்கென கச்சேரிகளில் டிக்கெட்க்கு 10 ரூவாய் அதிகம் வைத்து விற்பதால் யாரும் இங்கே ஏழை ஆகி விட போவதில்லை.. அவருக்கும் ஒரு வருமானம் வரும்.
Rate this:
Venkatesh - Gobichettipalayam,மத்திய ஆப்ரிக்க குடியரசு
19 மார்,2017 - 23:54 Report Abuse
Venkatesh Raja sir, சமீபகாலமாக உங்களுக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள். குறிப்பாக, உங்கள் துணைவியார் மறைவுக்குப் பின். காசுவாங்கிக் கொண்டு (ரூ 5 கோடி வாங்கினீர்கள் என்று கேள்வி, -- எங்கள் இசைஞானிக்கா இவ்வளவு பணத்தேவை என்று வியந்தேன்!!!) உங்கள்ஆயிரமாவது பட நிகழ்ச்சி அந்த கேவலமான Vijay TV யில் வந்தது. பின்பு ஒரு பட promotion க்காக கடற்கரையில் அழகிகளுடன் காடசி தந்தது. இதைப்பார்த்து உங்கள் நண்பர் பாரதி்ராசாவே பரிதாபமாக இருக்கிறது என்றார். மேலும் எங்கள் பகுதி்யில் ஒரு பளளியின் ஆண்டு விழாவில் அந்த பள்ளியின் தாளாளர் (கலவித்தந்தை) எவ்வளவு காசானாலும் செலவு செய்து உங்களை அழைத்து வருவதாக சொன்னார்!!! ஆனால் நான் நினைத்தேன் , எங்கள் raja sir, இதற்கெல்லாம் மசிய மாட்டார் என்று . ஆனால் அதையும் பொய்யாக்கி வேறொரு கல்வித்தந்தையின் பள்ளிக்கு வருகை புரிந்தீர்கள். நீங்களுமா காசுக்கு விலைபோய் விட்டீரகள் ?? உங்கள் இசையை நாங்கள் மூச்சுக்காற்றாக வைத்து சுவாசிக்கிறோம். எங்களுக்குமா தடை போடுவீர்கள்??இறுதி்யாக ஒன்று இசை உருவானது உங்கள் எண்ணமாக இருக்கலாம் ஆனால் அந்தக் கறபனைககு ஆதாரமாக உந்துதலாக இருந்தது இவர்களின் குரல் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.... வாழ்க வளமுடன்.
Rate this:
Bava Husain - riyad,சவுதி அரேபியா
19 மார்,2017 - 22:13 Report Abuse
Bava Husain இளையராஜா தன் ஆணவத்தாலேயே, பலபேரின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார்....இப்போது அல்பத்தனமாகவும் நடக்க ஆரம்பித்து விட்டார்...தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கிவிட்டுத்தானே இசையமைத்தார்???...அப்போது அந்த உரிமம் தயாரிப்பாளர்களுக்குத்தானே சொந்தம்??? மேலும் பாடியது "SPB " என்பதால் அது அவரின் பாடலும்கூட...அவருக்கும் உரிமை கொண்டாட உரிமை இருக்கிறது... ராஜா சார், நீங்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், உங்கள் பாடலை யாரோ ஒருவர் பாடி, அதை மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.இப்படி பணத்தாசை பிடித்து அனைத்திற்கும் தடை போட்டால், மக்கள் உங்களை மறந்துவிடுவார்கள்...அப்போது நீங்கள் ராஜவல்ல...வெறும், மூடிவைத்த கூஜா...
Rate this:
Arun - Chennai,இந்தியா
20 மார்,2017 - 12:46Report Abuse
Arunella melai naadugalilum irukkum murai thaan.. neengal uruvaakum porulukku neengal thaan muthalali.. athanai oruvar payan paduththa vumral, avaridam urimam petru thaan seyya vum.. mettuku thaan varigalum vaarthayum kuralum.. aaga oru paadalil isai amaippalar pangu adhigame.. royalty kuduthuvittu paadungalen.....
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film EN AALODA SERUPPA KAANOM
  Tamil New Film Vivegam
  • விவேகம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film thappu thanda
  • தப்புதண்டா
  • நடிகர் : சத்யா (புதுமுகம்)
  • நடிகை : சுவேதா கய்
  • இயக்குனர் :ஸ்ரீகண்டன்
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in