ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி 2' படத்தின் டிரைலர் நேற்று முன் தினம் காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் ஃபேஸ்புக், யு டியுப் ஆகிய இரண்டிலும் சேர்த்து 5 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்தது.
24 மணி நேரத்தில் 2 கோடி பார்வைகளைக் கடந்த 'பாகுபலி 2' படத்தின் டிரைலருக்கு அடுத்த 24 மணி நேரத்தில் பார்வை குறைந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். இருந்ததாலும் இந்த 48 மணி நேரத்தில் நான்கு மொழிகளையும் சேர்த்து ஃபேஸ்புக், யு டியூப் ஆகியவற்றின் மூலம் 6 கோடியே 50 லட்சம் பார்வைகளைப் பெற்று இந்தியாவிலேயே அதிக பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையைப் புரிந்துள்ளது.
ஆனாலும், யு டியூபில் ஆமீர்கான் நடித்து வெளிவந்த 'தங்கல்' பட டிரைலரின் சாதனையை 'பாகுபலி 2' டிரைலர் முறியடிக்க இன்னும் 2 கோடியே 50 லட்சம் பார்வைகள் தேவைப்படுகிறது. 'தங்கல்' டிரைலர்தான் யு டியூபில் அதிகம் பார்வையிடப்பட்ட இந்தியப் பட டிரைலர் என்ற பெருமையைத் தக்க வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள 'ரயீஸ்' டிரைலர் உள்ளது.
தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'கபாலி' படத்தின் டீசர் 3 கோடியே 35 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.