ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளவட்ட ஹீரோக்களிடம் உங்களுக்கு பிடித்தமான தமிழ் நடிகர் யார் என்று கேட்டால், விஜய், அஜித் என இரண்டு பேரின் பெயரையும் சொல்வார்கள். யாராவது ஒருவரை மட்டும் குறிப்பிட்டால் மற்றொருவர் கோபப்படுவாரோ என்கிற எண்ணம்தான் அதற்கு காரணம். ஆனால், இந்த விசயத்தில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் விஜய் அண்ணாதான் என்று தைரியமாக சொல்லி விஜய்யிடம் தனக்கு பிடித்த விசயங்களையும் பட்டியலிடுகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.
இப்படி விஜய்யின் ரசிகராக இருந்து சாதாரண ரசிகர்களைப்போன்று அவருக்கு ஒன்று என்றால் ஜி.வி.பிரகாஷ் வரிந்து கட்டுவதால், இப்போது விஜய்யின் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள் திரைக்கு வருபோதும் விஜய் படங்களுக்கு போஸ்டர் ஒட்டி வரவேற்பு கொடுப்பதுபோன்று ஜி.வி., படங்களுக்கும் கொடுக்கிறார்கள். அந்தவகையில் நேற்று திரைக்கு வந்துள்ள ஜி.வி.பிரகாஷின் புருஸ்லீ படத்திற்கு கட்அவுட், போஸ்டர் என ஒட்டியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.
இதுஒருபுறம் இருக்க, இப்படியொரு மோசமான படத்திற்கு விஜய் ரசிகர்கள் போஸ்டர் எல்லாம் ஒட்டி கொண்டாடுவதை சமூகவலைதளங்களில் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.