Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசை கலைஞர்களுக்கு உதவுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

17 மார், 2017 - 15:50 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-to-help-musician

இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் நடத்திய பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை தொகுத்து ஒன் ஹார்ட் என்ற திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பிரிமியர் காட்சி அண்மையில் அமெரிக்காவில் நடந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள்.


இந்த திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் வறுமையில் வாடும் இசை கலைஞர்களுக்கும், சாதிக்க துடிக்கும் இசை கலைஞர்களுக்கும் உதவும் வகையில் வழங்குகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இதற்காக அவர் ஒன்ஹார்ட் மியூசிஷியன் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.


ஒன்ஹார்ட் திரைப்படத்தில் வரும் வருமானம் இந்த தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும். அதன் மூலம் இசை கலைஞர்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். குளோபல் இண்டியன் மியூசிக் அகாடமி என்ற நிறுவனம் இந்த அமைப்பை நிர்வகிக்கும். திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஏ.ஆர்.ரஹ்மான் இந்த தொண்டு நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in