ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒருவனின் வெற்றிக்கு திறமை, உழைப்பு காரணமாக இருந்தாலும், சிலருக்கு சென்ட்டிமென்ட்டும் ரொம்பவே கை கொடுக்கும். இதை அஜித் எப்போதும் கடைப்பிடிப்பார். புதுப்படத்தில் நடிக்க கதை கேட்பது, அக்ரிமெண்ட்டில் கையெழுத்திடுவது, படத்துக்கு பூஜை போடுவது, பர்ஸ்ட்லுக் வெளியிடுவது, டீசர், டிரைலர் வெளியிடுவது, படத்தை ரிலீஸ் செய்வது என எல்லா விஷயங்களையும் வியாழக்கிழமை அன்றுதான் செய்கிறார் அஜித். இதன் உச்சகட்டமாக, 'விவேகம்' படத்தின் ஒவ்வொரு ஷெட்யூல் படப்பிடிப்பையும் கூட வியாழக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாராம்.
அதன்படி, 'விவேகம்' படத்திற்கான கடைசி ஷெட்யூல் படப்பிடிப்புக்காக பல்கேரியாவுக்கு சென்றுள்ளது படக்குழு. நேற்றைய முன்தினம் இரவு அஜித்தும் விமானத்தில் பல்கேரியாவிற்கு புறப்பட்டு சென்றார். அஜித்தின் சென்ட்டிமென்ட்டின்படி இன்று வியாழக்கிழமை பல்கேரியாவில் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஒரு மாத காலம் அங்கு படப்பிடிப்பை நடத்தி முடிக்கவிருக்கின்றனர்.